இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 337 ரன்னுக்கு ஆல் அவுட்

0 3139

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய தனது முதல் இன்னிங்கில் 337 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 578 ரன் குவித்திருந்தது. இதனை அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடிய இந்திய போட்டியின் 4வது நாளான இன்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக இந்திய அணி வீரர்கள் ரிஷப் பண்ட் 91 ரன்னும், வாசிங்டன் சுந்தர் 85 ரன் மற்றும் புஜாரா 73 ரன்கள் எடுத்திருந்தனர். இதன் மூலம் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 242 ரன் பின் தங்கியது.

தற்போது இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments