கிருஷ்ணகிரி அருகே சசிகலா ஆதரவாளர்கள் பட்டாசு எடுத்து வந்த காரில் தீ விபத்து; 2 கார்கள் தீயில் எரிந்து சேதம்

கிருஷ்ணகிரி அருகே சசிகலா ஆதரவாளர்கள் பட்டாசு எடுத்து வந்த காரில் தீ விபத்து; 2 கார்கள் தீயில் எரிந்து சேதம்
கிருஷ்ணகிரி அருகே சசிகலாவை வரவேற்க நின்றிருந்தவர்கள் கொளுத்திய பட்டாசில் இருந்து தீப்பற்றி இரு கார்கள் எரிந்து நாசமாகின.
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே நின்றிருந்தவர்கள், பட்டாசுகளை காரின் அருகே வைத்து கொளுத்தியுள்ளனர். இதில் ஒரு காரில் பற்றிய தீ அருகே இருந்த காருக்கும் பரவியது.
தீப்பிடித்து எரிந்த கார் வெடித்துவிடப் போகிறதோ என அஞ்சி அருகில் இருந்தவர்கள் தூரமாகச் சென்றுள்ளனர். இதனால் தீயை அணைக்க ஆளில்லாமல் 2 கார்களுகளும் முற்றிலும் எரிந்து நாசமாகின.
அருகில் இருந்த மற்றொரு காரின் கண்ணாடியை உடைத்து அவசர அவசரமாக அந்த காரை அங்கிருந்து நகர்த்தினர்.
Comments