ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலைப் பகுதிகளை இணைத்து புலிகள் காப்பகம் அமைக்க மத்திய அரசு அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலைப் பகுதிகளை இணைத்து புலிகள் காப்பகம் அமைக்க மத்திய அரசு அனுமதி
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மேகமலைப் பகுதிகளை இணைத்து நாட்டின் 51-வது புலிகள் காப்பகத்தினை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
626 ச.கி.மீ பரப்பளவு கொண்ட மேகமலை முன்னதாக வன உயிரின சரணாலயமாக மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு அங்கு 11 பெண் புலிகள், 3 ஆண் புலிகள் என மொத்தம் 14 புலிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதுபோலவே ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணிகள் சரணாலயப் பகுதிகளிலும் புலிகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணிகள் சரணாலயத்தையும் மேகமலை வன உயிரின சரணாலயத்தையும் இணைத்து புலிகள் காப்பகம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Comments