கள்ளக்குறிச்சி : இரண்டு விவசாயிகளிடையே மோதல்... ஒருவருக்கு காது துண்டான பரிதாபம்!

0 2086

கள்ளக்குறிச்சி அருகே இரண்டு விவசாயிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு விவசாயி ஒருவர் மற்றொரு விவசாயியின் காதை கடித்து துப்பிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள  ஆலத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவர்,  ஆலத்தூர் கிராம அம்மா பேரவை செயலாளராக உள்ளார்.  தனது விவசாய நிலத்தில் கரும்பு அறுவடை செய்துள்ளார். பின்னர் , அவரது நிலத்தில் இருந்த காய்ந்த கரும்பு சருகுகளை தீவைத்து எரித்துள்ளார். கோவிந்தன் நிலத்திற்கு பக்கத்தில் நிலம் வைத்துள்ள ராஜா என்பவர் பயிறிட்டிருந்த கரும்பு பயிர் மீது தீ ஜுவாலைகள் பட்டு கரும்பு பயிர் சேதம் அடைந்துள்ளது.

இதனை கண்ட ராஜா கோவிந்தனிடம் சென்று ஏன் எனது கரும்பு பயிர்களுக்கு தீ வைத்தாய் என்று கேட்டுள்ளார்.  இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு கைகலப்பாக மாறிய நிலையில் கோவிந்தன், ராஜாவின் வலது காதை கடித்து துப்பியுள்ளார். இதனால் வலியால் துடித்த ராஜா ரத்தம் சொட்ட சொட்ட கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைக்காக சேர்ந்தார்.

அரசு மருத்துவமனைக்கு விரைந்த கள்ளக்குறிச்சி போலீசார் , காயம்பட்ட ராஜாவிடம் கள்ளக்குறிச்சி போலீசார் வாக்குமூலம் பெற்றனர். மேலும்,  காதை கடித்து துப்பிய அதிமுக பிரமுகரும் விவசாயுமான கோவிந்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments