டெல்லிக்கு கடத்தி வரப்பட்ட 60 லட்சம் சிகரெட்டுகள்: பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்

0 677

டெல்லிக்கு கடத்தி வரப்பட்ட 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜட்டிபூர், பானிபட் உள்ளிட்ட இடங்களில் இருந்து டெல்லிக்கு வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தி வரப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது கண்டெய்னர் ஒன்றினைச் சோதனை செய்தபோது, அதில் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 60 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் இருப்பதைக் கண்டு அவற்றைப் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments