சென்னை உயர்நீதிமன்றத்தில் 11 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் நேரடி விசாரணை

சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் நேரடி விசாரணை
11 மாதங்களுக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் இன்று முதல் நேரடி விசாரணை தொடங்கியது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக, நீதிமன்றங்களில் காணொலி காட்சி வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
இந்நிலையில் 11 மாதங்களுக்கு பின்னர், இன்று முதல் நேரடியாக விசாரணைகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் நேரடி விசாரணை தொடங்கியது.
இறுதி வழக்கு விசாரணைகள் மட்டும் காலை, மாலை என இரண்டு வேளைகளில் விசாரிக்கப்படும், 1 மணி நேரத்துக்கு 5 வழக்குகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும், மற்ற வழக்குகள் காணொலி மூலமே நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கில் இரு தரப்பிலும் தலா ஒரு வழக்கறிஞர் வீதம் அனுமதிக்கப்பட்டனர்.
Comments