பெங்களூரு ஏரியில் நூற்றுக்கணக்கான நத்தைகள் மர்மமான முறையில் மரணம்

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஏரியில் ஆயிரக்கணக்கான நத்தைகள், மர்மமான முறையில் இறந்து கரை ஒதுங்கியது, அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பரப்பனா அக்ரஹரா பகுதி அருகே 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் கழிவுநீர் கலக்கப்படுவதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு நத்தைகள் இறந்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பரப்பனா அக்ரஹரா சிறையில் இருந்து கழிவுநீர் குழாய் ஒன்று ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஏரி மிகவும் மாசடைந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Comments