பொதுத் துறை நிறுவனங்களில் அரசு முதலீட்டை திரும்ப பெறுவது தவறல்ல - நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து அரசின் முதலீட்டை திரும்பப் பெறும் திட்டம் குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனம் சரியானது அல்ல என நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் நடந்த சந்திப்பின்போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த நிர்மலா சீத்தாராமன், தாம் தாக்கல் செய்த பட்ஜெட் இந்திய பொருளாதாரத்தின் பாதையையே மாற்றக் கூடியது என வர்ணித்தார். பட்ஜெட் குறித்த மக்களின் மனோபாவத்தை இந்த பட்ஜெட் மாற்றியுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Comments