இறந்த ஒருவருக்கு திதி கொடுக்க வேனில் சென்றவர்கள் விபத்தில் சிக்கினர், 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்

0 2616

தூத்துகுடி மாவட்டம், விளாத்திக்குளத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், இறந்தவர் ஒருவருக்கு திதி கொடுக்க வேனில் சென்ற போது விபத்தில் சிக்கினர்.

இவர்கள் வெம்பூரிலிருந்து, சிப்பிகுளம் நோக்கி வேனில் பயணித்த போது, சல்லிசெட்டிபட்டி அருகே சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பேருந்து நிறுத்தச் சுவரில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் உட்பட, 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக சொல்லப்படும் நிலையில், விபத்தில் சிக்கியவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments