இந்திய - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

0 1603
இந்திய - இங்கிலாந்து அணிகள் விளையாடும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணையத்தளத்தில் நாளை தொடங்க உள்ளது.

இந்திய - இங்கிலாந்து அணிகள் விளையாடும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணையத்தளத்தில் நாளை தொடங்க உள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13 முதல் 17 வரை நடைபெற உள்ளது.

கொரோனா சூழலில் முதல் டெஸ்ட் போட்டியைக் காணப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு விதிகளைப் பின்பற்றி இரண்டாவது டெஸ்ட் போட்டியைக் காணப் பார்வையாளர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான டிக்கெட் விற்பனை திங்கள் பகல் 10 மணிக்குத் தொடங்குகிறது.

100 ரூபாய், 150 ரூபாய், 200 ரூபாய் என்கிற விலையில் பேடிஎம், இன்சைடர் இணையத்தளங்களிலும், இந்த இரு செயலிகளிலும் டிக்கெட்டுகளை வாங்கலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments