போக்குவரத்து காவல் ஆய்வாளரை கார் ஏற்றி கொல்ல முயற்சி; மதுபோதையில் தப்பி சென்ற ஓட்டுநர்

மதுரையில் போக்குவரத்து காவல் ஆய்வாளரை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் போக்குவரத்து காவல் ஆய்வாளரை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தெப்பகுளம் அருகேயுள்ள பிடிஆர் பாலம் பகுதியில் நேற்றிரவு போக்குவரத்து காவல் ஆய்வாளர் நந்தகுமார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு காரை நிறுத்த முற்பட்டுள்ளார்.
ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததால் காரை நிறுத்தாமல் நந்தகுமார் மீது மோதியவாறு தப்பிச்சென்றார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கார் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த கார் சென்னையை சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காரின் உரிமையாளரை தொடர்புகொண்ட போலீசார் காருடன் ஓட்டுநரை காவல்நிலையம் அழைத்து வரும் படி எச்சரித்துள்ளனர்
Comments