விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கும் பன்னாட்டுப் பிரபலங்களுக்கு அது பற்றி அதிகம் தெரியாது- அமைச்சர் ஜெய்சங்கர்

0 688
விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கும் பன்னாட்டுப் பிரபலங்களுக்கு அது பற்றி அதிகம் தெரியாது- அமைச்சர் ஜெய்சங்கர்

விவசாயிகளின் போராட்டம் பற்றிப் பேசும் பன்னாட்டுப் பிரபலங்களுக்கு அதைப் பற்றி அதிகம் தெரியாது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து சுவீடனைச் சேர்ந்த காலநிலைச் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க், பார்படாசைச் சேர்ந்த பாடகி ரிகானா உள்ளிட்ட பிரபலங்கள் டுவிட்டரில் பதிவிட்டனர்.

இது குறித்துச் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கிரேட்டா தன்பர்க் வெளியிட்ட பதிவு யாரால் உருவாக்கப்பட்டது என்கிற விசாரணையில் நிறைய உண்மைகள் வெளிவந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

பன்னாட்டுப் பிரபலங்களுக்கு விவசாயிகளின் போராட்டம் பற்றி அதிகம் தெரியாது என்றும் அவர் தெரிவித்தார். ஒரு விவகாரத்தில் உண்மைகளை அறிந்து முறையாகப் புரிந்துகொண்ட பின் அது குறித்துக் கருத்துக் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments