முதலை குட்டியை வாலை பிடித்து இழுத்து துன்புறுத்திய இளைஞர் ... முக்கொம்பு காவிரி ஆற்றில் சம்பவம் !

0 9225

வீட்டு விலங்குகள், வன விலங்குகளை துன்புறுத்துவோருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து ஒரு நாள் கூட ஆகவில்லை. அதற்குள், முக்கொம்பு பகுதியில் முதலை குட்டி ஒன்றின் வாலை பிடித்து இளைஞர் துன்புறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாய் , பூனைகள் , யானைகள், குரங்குகளை துன்புறுத்துவதோடு மனிதர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை. தற்போது, ஆக்ரோஷம் நிறைந்த முதலைகளையும் மனிதர்கள் துன்புறுத்த தொடங்கியுள்ளனர். திருச்சி மாவட்டம் முக்கொம்புக்கு சுற்றுலா வருபவர்கள் காவிரி ஆற்றில் குளிப்பது வழக்கம். சில தினங்களுக்கு முன்பு இளைஞர்கள் சிலர் அங்கு வந்து குளித்துள்ளனர். அப்போது, முதலைக் குட்டி ஒன்று அங்கே வந்துள்ளது. இதைப் பார்த்த இளைஞர் ஒருவர், முதலைக்குட்டியின் வாலை பிடித்து இழுத்து அதை தர தரைவென்று இழுத்து சென்றார். மற்றோரு, இளைஞர் முதலையை இழுத்து செல்வதை வீடியோ படம் எடுத்துள்ளார்.image

பின்னர், அந்த வீடியோவை சமூகவலைத் தளத்திலும் வெளியிட்டுள்ளனர். தற்போது, இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மான், முயல், காட்டுப்பன்றி வரிசையில் தற்போது முதலை வேட்டையும் நடைபெற்றிருக்கலாம் என்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். முதலையை அந்த இளைஞர்கள் மீண்டும் தண்ணீரில் விட்டனரா அல்லது சமைத்து சாப்பிட்டனரா என்றும் விசாரணை நடத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சேலம் அருகே வீட்டுக்குள் புகுந்த சாரைப்பாம்பை வெட்டி சமைத்து சாப்பிட்ட சம்பவமும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments