கொரோனா தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த வேண்டும்.. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

0 619
கொரோனா தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த வேண்டும்.. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கையை விரைவு படுத்துமாறு மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக சுகாதார, குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறைந்தது அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் வரும் 20 ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டு முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சராசரியாக 60 சதவிகித சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.ஆனாலும் பல மாநிலங்களில் இந்த எண்ணிக்கை இதற்கும் குறைவாகவே உள்ளதால், மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

அதே போன்று கோவின் செயலியில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்குமாறும் மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments