கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான இந்திய மருந்து பொருட்களின் ஏற்றுமதி ரூ.1.28 லட்சம் கோடி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தகவல்

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான இந்திய மருந்து பொருட்களின் ஏற்றுமதி ரூ.1.28 லட்சம் கோடி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தகவல்
இந்திய மருந்து பொருள்களின் ஏற்றுமதி 2020 ஆம் ஆண்டு ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் ஒரு லட்சத்து 28ஆயிரம் கோடி ரூபாயினை எட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ், நெருக்கடியான சூழலிலும் இந்திய மருந்து பொருள்களின் ஏற்றுமதி சரிவு நிலையை நோக்கி செல்லவில்லை என்றார்.
2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாத காலத்தில் மருந்து பொருள்களின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 12.43 சதவீத வளர்ச்சி விகிதத்தை தக்கவைத்து ஆயிரத்து 757 கோடி டாலராக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Comments