ஸ்டாலின் சொல்வதை நான் செய்வதில்லை, நான் செய்வதைத்தான் ஸ்டாலின் சொல்கிறார்- முதலமைச்சர்

0 5657
ஸ்டாலின் சொல்வதை நான் செய்வதில்லை, நான் செய்வதைத்தான் ஸ்டாலின் சொல்கிறார்- முதலமைச்சர்

ஸ்டாலின் சொல்வதை தாம் செய்வதில்லை, தாம் செய்வதைத்தான் ஸ்டாலின் சொல்கிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போரூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தாம் ஒரு விவசாயி என்ற முறையிலேயே பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டதாகக் குறிப்பிட்டார்.

திமுக என்பது கட்சியல்ல, கம்பெனி என்று குற்றம்சாட்டிய முதலமைச்சர், தேர்தல் வருவதற்கு முன்னதாக பலர் வாக்குறுதி அளிக்கலாம் என்றும் ஆனால் தேர்தலுக்கு முன்னதாக வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு மக்களை சந்திக்கும் கட்சி அதிமுக என்றும் கூறினார்.

குடிமராமத்து போன்ற சிறந்த திட்டங்களை தாங்கள் செயல்படுத்தி வருவதாகக் கூறிய முதலமைச்சர், சென்னை மக்களுக்கு இன்னும் ஓராண்டுக்குத் தேவையான குடிநீரை தேக்கி வைத்துள்ளோம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments