சென்னையில் கடற்படை அதிகாரி கடத்தப்பட்டு பணம் கேட்டு தராததால் தீ வைத்து கொளுத்திக் கொன்ற கொடூரம்

0 41026
சென்னையில் கடற்படை அதிகாரி கடத்தப்பட்டு பணம் கேட்டு தராததால் தீ வைத்து கொளுத்திக் கொன்ற கொடூரம்

சென்னையில் கடற்படை மாலுமியைச் கடத்தி 3 நாட்கள் அடைத்து வைத்து விடுவிக்கப் பத்து லட்ச ரூபாய் கேட்டுக் கிடைக்காததால், பின்னர் மும்பை அருகே அவரை உயிரோடு எரித்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள கடற்படைப் பயிற்சி மையமான ஐஎன்எஸ் அக்ராணியில் பணியாற்றிய சூரஜ் குமார் துபே சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து விமானத்தில் ஜனவரி முப்பதாம் நாள் சென்னைக்குத் திரும்பினார். இரவு 9 மணிக்கு விமான நிலையத்துக்கு வெளியே வந்தபோது துப்பாக்கி முனையில் அவரைக் கடத்திச் சென்ற மூவர் சென்னையில் ஓர் அறையில் 3 நாட்கள் அடைத்து வைத்துப் பத்து லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அதன்பின் மும்பை அருகே உள்ள பால்கருக்குக் கடத்திச் சென்றுள்ளனர். பணம் கொடுக்க மறுத்ததால் அவரது கைகால்களைக் கட்டிக் காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்று உயிரோடு தீவைத்துள்ளனர்.

அவரது அலறலைக் கேட்ட அப்பகுதி மக்கள் மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். 90 விழுக்காடு தீக்காயம் அடைந்ததால் மும்பையில் உள்ள கடற்படை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். வழியில் தனக்கு நேர்ந்த கொடுமையைக் காவல் துறையினரிடம் அவர் கூறியுள்ளார்.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது தொடர்பாகக் கொலை, பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மகாராஷ்டிரக் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கொல்லப்பட்ட மாலுமியின் தந்தை மிதிலேஷ் துபே செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தனது மகன் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். சென்னையில் கடற்படை அதிகாரியைக் கடத்தி மும்பைக்குக் கொண்டு சென்று உயிரோடு தீவைத்து எரித்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments