ஆப்கானிஸ்தானில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு; 3 பேர் உயிரிழப்பு, 4பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு; 3 பேர் உயிரிழப்பு, 4பேர் படுகாயம்
ஆப்கானிஸ்தானில் இரண்டு இடங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களில் 3பேர் கொல்லப்பட்டனர். 4பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காபூலில் கடை ஒன்றின் உட்புற பகுதியில் குண்டுவெடித்ததில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2 சீக்கியர் உள்பட 4பேர் காயம் அடைந்தனர். இரண்டாவது குண்டு காபூலின் வடக்குப் பகுதியில் வெடித்தது.
போலீஸ் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
Comments