ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த லஷ்கர் இ முஸ்தபா என்ற பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் கைது..!

0 2269
ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த லஷ்கர் இ முஸ்தபா என்ற பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் கைது..!

ம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த, லஷ்கர் இ முஸ்தபா என்ற பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் ஹிதயதுல்லா மாலிக் கைது செய்யப்பட்டான்.

இந்த இயக்கம் ஜெய்ஷே முகமது இயக்கத்தின் கிளை அமைப்பாகவும் செயல்பட்டு வந்தது. புல்வாமாவில் கடந்த மே மாதம் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்றவர்களில் தொடர்புடைய முக்கியமான பத்து தீவிரவாதிகளில் ஒருவன் ஹிதயதுல்லா மாலிக்.

முன்னதாக நான்கு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஹிதயதுல்லாவைப் பற்றிய தகவல்கள் போலீசாருக்குக் கிடைத்தன. அவர்கள் காஷ்மீரில் வன்முறைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதை ஒப்புக் கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments