தாய்லாந்தில் சிப்பிகளைப் பொறுக்கி எடுத்த மீனவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

தாய்லாந்தில் சிப்பிகளைப் பொறுக்கி எடுத்த மீனவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
தாய்லாந்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு அரிதினும் அரிதான ஆரஞ்சு நிற முத்து கிடைத்துள்ளது.
நகோன் சி தம்மாரட் என்ற இடத்தைச் சேர்ந்த ஹட்சாய் என்பவர் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அவர் கடல் பகுதியில் சிப்பிகளைப் பொறுக்கி அதனை விற்று வந்தார்.
ஒரு சிப்பியைப் பிரித்து பார்த்த போது, அதனுள் ஆரஞ்சு நிற முத்து இருப்பதைக் கண்டார்.
ஹட்சாய் உடனிருந்த அவரது நண்பர், இதுபோன்ற ஆரஞ்சு நிற முத்து அரிதினும் அரிதானது என்று கூறவே, மறுநாள் அதனை எடை போட்டு பார்த்த போது அந்த முத்து கிட்டத்தட்ட 8 கிராம் எடை இருப்பது தெரியவந்தது.
தற்போது அந்த முத்து இந்திய மதிப்பில் சுமார் இரண்டரை கோடி ரூபாய் வரை விலைபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments