உத்தரப்பிரதேசத்தில் பெண்கள், குழந்தைகள் மீது வீடு புகுந்து கத்தியால் குத்தியதில் 2 பெண்கள் உயிரிழப்பு, 3 குழந்தைகள் படுகாயம்

உத்தரப்பிரதேசத்தில் பெண்கள், குழந்தைகள் மீது வீடு புகுந்து கத்தியால் குத்தியதில் 2 பெண்கள் உயிரிழப்பு, 3 குழந்தைகள் படுகாயம்
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் வீட்டில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 5 பேரை கத்தியால் குத்தியதில், டீயூசன் சொல்லிக் கொடுக்க வந்த ஆசிரியை உள்பட இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆறு ஆண்டுகளாக அந்த வீட்டுக்கு பரிச்சயமான தச்சு வேலை செய்யும் ஒருவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments