"சச்சின் டெண்டுல்கர் மற்ற துறைகளைப் பற்றி பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்": சச்சினின் டிவிட்டர் பதிவால் வந்த எதிர்வினைகளையடுத்து சரத் பவார் கருத்து

0 2026
"சச்சின் டெண்டுல்கர் மற்ற துறைகளைப் பற்றி பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்": சச்சினின் டிவிட்டர் பதிவால் வந்த எதிர்வினைகளையடுத்து சரத் பவார் கருத்து

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் விவசாயிகள் போராட்டத்தில் இந்திய அரசுக்கு ஆதரவாக வெளியிட்ட ஒரேயொரு டிவிட்டர் பதிவு, அவர் புகழைப் பதம் பார்த்துள்ளது.

விவசாயிகள் குறித்த பிரபல பாப் பாடகி ரிஹான்னா கருத்துக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட கருத்தை நெட்டிசன்கள் கிண்டலடித்தும் விமர்சித்தும் சமூக ஊடகங்களில் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், மற்ற துறைகள் குறித்து பேசும்போது சச்சின் டெண்டுல்கர் கவனமாக இருக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவுரை வழங்கியுள்ளார்.

செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த சரத் பவார், விவசாயிகள் போராட்டம் விவகாரத்தில் இந்தியப் பிரபலங்களின் நிலைப்பாடு குறித்து ஏராளமானோர் கடுமையான எதிர்வினை ஆற்றியுள்ளனர்" என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments