இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கு 25 நாடுகள் வரிசையில் நிற்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கு 25 நாடுகள் வரிசையில் நிற்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
இந்தியாவில் உள்நாட்டுத் தயாரிப்பான இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளைப் பெறுவதற்கு, 25 நாடுகள் வரிசையில் நிற்பதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆந்திரா செய்தியாளர்களிடம் பேசிய அவர், 15 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கியுள்ள நிலையில், தடுப்பூசிக்காக 25 நாடுகள் வரிசையில் உள்ளதாக தெரிவித்தார்.
சில ஏழை நாடுகளுக்கு மானிய விலையில் தடுப்பூசி வழங்கப்படுவதாக கூறினார். சில நாடுகள் இந்திய தடுப்பூசியை வாங்க உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் நேரடி ஒப்பந்தங்கள் செய்துள்ளன என்றும் ஜெய்சங்கர் கூறினார்.
Comments