56.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது- சுகாதார அமைச்சகம்

0 523
56.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது- சுகாதார அமைச்சகம்

ந்தியாவில் இதுவரை 56 லட்சம் பேருக்குக் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு விட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தற்கும் குறைவாக உள்ளது. கடந்த எட்டு மாத நிலவரத்தில் இதுவே மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.

இந்நிலையில் கொரோனாவை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் வேகம் காட்டும்படி மத்திய சுகாதார அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 20 கோடியை கடந்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஏழு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments