அசாம், மே.வங்கத்தில் ரூ.4,700 கோடியில் திட்டங்கள்

சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ள அஸ்ஸாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு, பிரதமர் மோடி ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக இன்று செல்கிறார். 4700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை அவர் இருமாநிலங்களிலும் தொடங்கி வைக்க உள்ளார்.
இன்று காலை 11 .45 மணி அளவில் அஸ்ஸாமில் இரண்டு மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மாவட்ட சாலைகளையும் மேம்படுத்துவதற்கான `அசாம் மாலா' என்ற திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.
மாலையில் மேற்குவங்கம் மாநிலம் ஹால்டியாவில் நடைபெறும் நிகழ்ச்சியில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம் 1100 கோடி ரூபாயில் உருவாக்கியுள்ள எல்.பி.ஜி. இறக்குமதி முனையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். பிரதமரின் வீடுதோறும் எரிவாயு என்ற கனவுத்திட்டத்தை இது பலப்படுத்தும்.
மேலும் ரயில்வே மேம்பாலம், சாலைகள் ,விமான நிலையம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
Comments