மாநில மனித உரிமை ஆணைய உத்தரவுகளை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்

0 2114

மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுகள் அரசை கட்டுப்படுத்தும் என்பதால், அவற்றை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

மாநில மனித உரிமை ஆணைய உத்தரவுகளை எதிர்த்து  அதிகாரிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை, நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன், எம்.சுந்தர் அமர்வு விசாரித்தது. மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு அமல்படுத்த தவறினால், ஆணையம் நீதிமன்றத்தை அணுகலாம் என தீர்ப்பில்  கூறியுள்ள நீதிபதிகள், எக்காரணத்தை கொண்டும் மனித உரிமை ஆணைய பரிந்துரைகளை தவிர்க்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என தெளிவுபடுத்தியுள்ளனர்.

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தே இழப்பீட்டை வசூலித்துக் கொள்ளலாம், எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments