உங்கள் தொகுதியில் ஸ்டாலின்.! மக்கள் திரளில் பரப்புரை.!

0 1755
உங்கள் தொகுதியில் ஸ்டாலின்.! மக்கள் திரளில் பரப்புரை.!

மக்கள் சேவையை இலக்காக கொண்டிருக்கும் தன் மீது யார் எத்தனை அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தாலும், அதனை எதிர்கொள்ள, தாம் தயாராக இருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில், 234 தொகுதிகளிலும், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். இந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் ஆகிய இடங்களில், பொதுமக்களுடன் கலந்துரையாடி, அவர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, பிரச்சாரத்தில் ஈடுபட்டார்....

 

திமுக சொல்வதையே தற்போதைய ஆட்சியாளர்கள் செய்கிறார்கள் எனக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், 5 பவுன் வரையிலான கூட்டுறவு வங்கி நகை அடமானக் கடன் தள்ளுபடி அறிவிப்பு அடுத்த 3 நாட்களில் வரும் எனத் தெரிவித்துள்ளார்.

 

திமுக ஆட்சிக்கு வந்த நூறு நாட்களில், பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை எனில், மனு கொடுத்ததற்கான அட்டையுடன் கோட்டைக்குள் வந்து தைரியமாக கேள்வி எழுப்பலாம் என, பொதுமக்களுக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

அரசியல் பொது வாழ்க்கையில், நீதியை, நேர்மையை கடைபிடிப்பவர் என தாம், நீதிமன்றத்தால் பாராட்டப்பட்டதாக சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிகாலத்தில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு, பரப்புரை மேற்கொண்டார்.

 

வீரவநல்லூரில், பரப்புரையைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், யார் தம் மீது எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும், அதனை சந்திக்கத் தயார் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments