திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 500 கோவில்கள் கட்ட நடவடிக்கை

0 1768

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 500 கோவில்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் பேசிய தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர்ரெட்டி, தெலுங்கு மொழி பேசும் மக்கள் வசிக்கும் மாநிலங்களில் 500 கோவில்களை கட்ட தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது என்றார்.

வருகிற 19-ந்தேதி ரத சப்தமியன்று சூரிய ஜெயந்தி உற்சவம் திருமலையில் நடைபெறும் என்றும், அன்று காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் ஏழுமலையான் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments