வியட்நாம் எல்லை அருகே சீனா ஏவுகணை ஏவு தளம் அமைத்திருப்பதாக தகவல் ?

வியட்நாம் எல்லை அருகே, தனது ஏவுகணை ஏவு தளத்தை, சீனா அமைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது, இருநாடுகளிடையேயான எல்லைப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. சீனாவின் குவான்ஷி மாகாணத்திற்கு உட்பட்ட நிங்மிங் மாவட்டம், வியட்நாம் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.
இங்கு தான், சீனா, தனது ஏவுகணை ஏவு தளத்தை அமைத்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்த செயற்கைக்கோள் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
Comments