பார்த்தா சாதாரண கடல்பாசி... விண்வெளி வீரர்களுக்கே அதுதான் பிரேக்ஃபாஸ்ட்! - தூத்துக்குடி கடலில் மீனவர்கள் உற்சாக அறுவடை

0 8361

தூத்துக்குடியில் கடல்பாசி சீசன் தொடங்கியுள்ளதால், மீனவர்கள் உற்சாகமாக அவற்றை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏதோ... கடல்பாசிதானே என்ற அலட்சியப்பார்வை வேண்டாம் விண்வெளி வீரர்களுக்கே இந்த கடற்பாசியில் தயாரிக்கப்படும் மாத்திரைதான் முக்கிய உணவாக அமைந்துள்ளது என்பதை மறைந்து விட வேண்டாம்.

ஐஸ்கீரிம் , ஜிகர்தன்டா , சாக்லேட் போன்ற உணவு பொருள்களிலும் மற்றும் மருத்துவ பொருள்களிலும் கடல்பாசி பயன்படுத்தப்படுகிறது. இவற்றில்தான் உண்ணத்தகுந்த நுண்ணுயிரிகளான கடல்பாசிகள் சேர்க்கப்படுகின்றன. இந்தப் பாசிகளில் புரதச்சத்து அதிகமுள்ளன. பாசிகளில் நன்னீர் பாசி மற்றும் கடல்நீர் பாசி ஆகியவை உள்ளன. இவற்றிலுள்ள `ஜெலட்டின்' என்னும் பொருளும், அதில் அடங்கியுள்ள அதிமான புரதச்சத்தும் நம் உடலுக்கு அதீத நன்மையை அளிக்கின்றன.

ஸ்பைருலினா (( Spirulina))என்ற நீலப் பச்சைப்பாசி பூமியில் முதன்முதலாகத் தோன்றிய உயிரினங்களில் ஒன்றாகும். இது டைனசர்களுக்கு கூட மூத்தது. எல்லா இடங்களிலும் வளரக்கூடிய ஒரு தாவரம். இதில் வைட்டமின் பி-12 இதில் ஏராளமாக உள்ளது. மற்ற உணவுப் பொருள்களைவிட ஸ்பைருலினாவில் 15 மடங்கு இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. ரத்தச்சோகை நோய் வராமல் தடுக்க இந்த ஸ்பைருலினா உதவுகிறது. இந்தக் காரணங்களால் ஸ்பைருலினா மாத்திரை வடிவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விண்வெளி வீரர்கள் இந்த ஸ்பைருலினா மாத்திரையை அதிகம் எடுத்துக் கொள்கிறார்கள். ஸ்பைருலினா மாத்திரைகள் நிகழ்த்தும் மேஜிக்கல் காரணமாகவே '0 ' கிரேவிட்டியில் இருக்கும் போது, அவர்களின் உடல் ஃபிட்டாக இருக்கிறது. இப்படி, மருத்துவ குணங்கள் நிறைந்த கடல்பாசிகள் அறுவடை சீசன் இந்த ஆண்டு சீக்கிரமே தொடங்கி விட்டது.

தமிழகத்தில் தூத்துக்குடி கடற்பகுதியில் கடல்பாசிகளை மீனவர்கள் அதிகளவில் அறுவடை செய்கிறார்கள். எப்படி விவசாய நிலத்தில் விவசாயிகள் விதையை தூவி பயிற்களை வளர்க்கிறார்களோ அதே போல கடலில் விதையை தூவி மீனவர்கள் கடல்பாசிகளை வளர்க்கின்றனர். இதற்கான, விதையை தூவும் மீனவர்கள் கடல்பாசிகள் நன்கு வளர்ந்ததும் மே மாதம் முதல் கடல் பாசிகளை அறுவடை செய்வார்கள். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே நன்கு வளர்ந்த கடல்பாசிகள் வளர்ந்து விட்டன. இதனால், கடல்பாசியை அறுவடை செய்யும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கடல்பாசியை கஷ்டப்பட்டு வளர்க்கும் மீனவர்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி சென்று அதிக லாபம் பார்ப்பதாகவும் அரசே தங்களிடத்தில் இருந்து கடல்பாசியை கொள்முதல் செய்ய முன் வரவேண்டுமென்று மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments