ஸ்லோவாக்கியா நாட்டு பிரதமருக்கு குடை பிடித்த பிரான்ஸ் அதிபர்... நெகிழ்ச்சியடைய வைக்கும் இமானுவேல் மாக்ரோனின் பண்பு

0 1445

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன், ஸ்லோவாக்கியா நாட்டு பிரதமருக்கு குடை பிடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பிரான்ஸுக்கு வருகை தந்த, ஸ்லோவாக்கியா பிரதமர் இகோர் மாடோவிக், அதிபர் மாக்ரோனை சந்திக்க எலிசி அரண்மனைக்கு வந்திருந்தார். சந்திப்புக்கு பிறகு இருவரும் கூட்டாக அரண்மனைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது திடீரென மழை பொழிந்ததால், தனக்கு பிடித்த குடையை வாங்கி ஸ்லோவாக்கிய பிரதமருக்கு பிடித்தார் இமானுவேல். பெண் உதவியாளர் அந்த குடையை வாங்க முன்வந்த போதும், மறுத்துவிட்ட மாக்ரோன், செய்தியாளர் சந்திப்பு முடிந்து அரண்மனைக்குள் செல்லும் வரை தானே குடையை பிடித்திருந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments