'ஸ்டாலினுக்கு பெருமாள் மீது நம்பிக்கை உண்டா?'- கோவிலில் மூதாட்டி கேட்ட கேள்விக்கு துர்கா அளித்த சுவாரஸ்யமான பதில்

0 9295

ஸ்டாலின் கோவிலுக்கு செல்வார், பெருமாள் மீது பக்தி உண்டு என்று மூதாட்டி கேட்ட கேள்விக்கு துர்கா ஸ்டாலின் சுவாரஸ்யமான பதிலளித்தார்.

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற வேண்டும் தன் கணவர் ஸ்டாலின் வெற்றி பெற்று தமிழக முதல்வராக வேண்டுமென்ற வேண்டுதளுடன் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மனைவி  துர்கா நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ் பெற்ற கோயில்களில் தரிசனம் செய்து வருகிறார். திருச்செந்தூர் முருகன் கோயிலிலும் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானுமாலை பெருமாள் கோவிலில் நேற்றிரவு துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். நெல்லை மாவட்டம் வரும் போதெல்லாம் நாங்குநேரி வானுமாலை பெருமாள் கோயிலுக்கு துர்கா செல்வது வழக்கம். அந்த வகையில் , நேற்றிரவு அங்கு சென்ற துர்கா, வானுமாலை ராமனுஜர் ஜீயரிடம் ஆசி பெற்றார். அப்போது, துர்காவின் உறவினர் பெண்கள் மற்றும் திமுக நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணு உடனிருந்தனர்.

இந்த சமயத்தில் கோயிலுக்கு வந்த மூதாட்டி ஒருவருக்கு அர்ச்சகர் , துர்காவை அறிமுகப்படுத்தி, 'இவர்தான் கருணாநிதி மகன் ஸ்டாலினின் மனைவி ' என்று அறிமுகப்படுத்தினார். அந்த மூதாட்டியிடன் துர்கா அன்புடன் பேசினார். அப்போது, திடீரென்று மூதாட்டி , துர்காவிடத்தில் , 'ஸ்டாலினுக்கு பெருமாள் நம்பிக்கை உண்டா ?' என கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத துர்கா, 'ஸ்டாலின் கோவிலுக்கு செல்வார் பெருமாள் மீது நம்பிக்கை உண்டு ' என மூதாட்டிக்கு நயமுடன் பதிலளித்தார். தொடர்ந்து, மூதாட்டி துர்காவை ஆசிர்வதித்து அங்கிருந்து அகன்று சென்றார்.

மூதாட்டியும் துர்காவும் உரையாடும் இந்த வீடியோ தற்போது சமூக தளங்களில் பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments