நீலகிரியில் சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் ”நீலக்குறிஞ்சி” மலர்கள்..!

நீலகிரியில் சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் ”நீலக்குறிஞ்சி” மலர்கள்..!
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் காண்போரைக் கவர்ந்து வருகிறது.
இங்குள்ள நூற்றாண்டுப் பழமை வாய்ந்த மரங்கள் மற்றும் தாவரங்களைக் காண வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் திசு வளர்ப்பின் மூலம் வளர்க்கப்பட்ட ஸ்டபிலான்தஸ் மினியேச்சர் வகை நீலக் குறிஞ்சி மலர்கள் தற்போது பூக்கத் துவங்கியுள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிஞ்சி மலர்கள் பூக்கும் நிலையில் இங்கு வீரிய ரகத்தில் இம்மலர்கள் வளர்க்கப்பட்டதால் காண்போரை வெகுவாக வசீகரித்து வருகின்றன.
Comments