'அப்படி தான் பண்ணுவேன் , என்ன பண்ணுவீங்க?' - சவால் விட்ட திருடனால் பரபரப்பு

0 17777

திருச்சி மாவட்டத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஒருவன் நீதிபதியைத் தகாத வார்த்தைகளில் பேசி, சவால் விடும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி, காந்தி மார்க்கெட் அருகே, கீரைகடை கடை பஜார் பகுதியில் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, பேராசிரியர் வீட்டில் திடீரென நுழைந்த மர்ம நபர், வீட்டிலிருந்த பேராசிரியரின் தாயாரைக் கத்தியால் குத்திவிட்டு, நகை மற்றும் பணத்தைக் கொள்ளை அடித்துள்ளான். இதில் அதிர்ஷ்டவசமாகப் பேராசிரியரின் தாயார் உயிர் தப்பினார். மேலும், அந்த மர்ம நபர் அங்கு வீட்டு வேலை செய்த 30 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவரை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளான். இதைத் தொடர்ந்து அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றபோது, தப்பியோடிய பெண் கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தபோது அந்த மர்ம நபர் தப்பியோடினான்.

இது தொடர்பாக, காந்தி மார்க்கெட் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோது, அந்த மர்ம நபர் கல்மந்தை பகுதியைச் சேர்ந்த டேவிட் என்பது தெரியவந்தது. 23 வயதான டேவிட்டுக்கு சில ஆண்டுகளாகவே போதை பழக்கம் இருந்துவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, டேவிட்டை கைது செய்த காவல்துறையினர், கொள்ளை - பாலியல் குற்றங்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை செய்த போது நீதிபதியைத் தகாத வார்த்தையால் திட்டத் தொடங்கினான். மேலும் , ’நான் செய்தது தப்பு தான், ஆனால், அவரால் என்ன செய்துவிடமுடியும்?’ என்று நீதிபதிக்கே சவால் விடும் விதத்தில் பேசினான். டேவிட்டின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments