சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.35,752க்கு விற்பனை

0 1211
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.35,752க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து, 35 ஆயிரத்து 752 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் மீதான சுங்கவரி குறைக்கப்படுமென மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.

அந்த வகையில் இன்று சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து, 35 ஆயிரத்து 752 ரூபாய்க்கும், கிராம் ஒன்றுக்கு 14 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 469 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் வெள்ளியும் கிராமுக்கு 80 பைசா அதிகரித்து, 73 ரூபாய், 40 காசுகளுக்கும், பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு 800 ரூபாய் அதிகரித்து 73 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments