முதலமைச்சரை இன்று மாலை ராமதாஸ் சந்திக்க உள்ளதாக தகவல்

இன்று மாலை நான்கு மணி அளவில் முதலமைச்சரை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திக்க உள்ளதாக தகவல்
வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு, கூட்டணி தொடர்பாக பா.ம.க.நிறுவுனர் ராமதாஸ், இன்று மாலை முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பா.ம.க சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கோரிக்கை தொடர்பாக அமைச்சர்கள் குழுவுடன் பா.ம.க குழு ஏழு முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
நேற்றும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திற்கு ராமதாஸ் இன்று மாலை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது கூட்டணி ஒப்பந்தம் தொடர்பாகவும் பேசப்படலாம் என கூறப்படுகிறது.
Comments