நாமக்கல்: மாணவியை ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டியவர் போக்சோவில் கைது

நாமக்கல் அருகே பேஸ்புக் மூலம் பழகிய பள்ளி மாணவியை ஆபாச புகைப்படம் எடுத்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டான்.
ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞருக்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது.
கடந்த 5 மாதங்களாக வீடியோ காலில் பேசி பழகிய அவன், மாணவியை ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளான். பின்னர் புகைப்படங்களை செல்போனுக்கு அனுப்பி தனது ஆசைக்கு இணங்குமாறும், இல்லையெனில் இணையத்தில் வெளியிடபோவதாகவும் தொடர்ந்து மிரட்டியுள்ளான்.
இதனால், பயந்துபோன மாணவி தாயாரிடம் விவரத்தை கூறி ராசிபுரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து தமிழ்செல்வனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், அவனிடமிருந்து ஆபாச புகைப்படங்களை பறிமுதல் செய்தனர்.
Comments