சென்னையில் வருகிற 18-ம் தேதி நடைபெறுகிறது ஐ.பி.எல். ஏலம்..! ஏலத்தில் கலந்து கொள்ள 1,097 வீரர்கள் பதிவு

சென்னையில் வருகிற 18-ம் தேதி நடைபெறுகிறது ஐ.பி.எல். ஏலம்..! ஏலத்தில் கலந்து கொள்ள 1,097 வீரர்கள் பதிவு
சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ள ஆயிரத்து 97 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்நிலையில், 14-வது ஐ.பி.எல். சீசன் வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது.
அதற்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் பதிவு செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடவடைந்தது. இதில் 814 இந்திய வீரர்களும், 283 வெளிநாட்டு வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.
அதிகபட்சமாக மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த 56 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
Comments