அழகுக்காக மூக்கில் அறுவை சிகிச்சை... வினையில் முடிந்ததால் வாழ்க்கையை இழந்த நடிகை!

0 9551

சீனாவில் நடிகை ஒருவர், தனது மூக்கை அழகுபடுத்த வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்டது அவரது வாழ்க்கையையே சோகமாக மாற்றியுள்ளது.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மூக்கு, உதடு மற்றும் முக அழகை மாற்றிக்கொண்ட நடிகைகள் ஏராளம். அப்படிப்பட்ட நடிகைகளுள் ஒருவர் தான் சீனாவைச் சேர்ந்த பிரபல நடிகை காவ் லியூ. இவர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.  இவர் தனது முக அழகை மேலும் வசீகரமாக மாற்ற வேண்டும் என்பதற்காக மூக்கில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளத் திட்டமிட்டார். இதன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கை மேலும் உயரும் என்று நம்பி கடந்த ஆண்டு, அக்டோபர் மாத இறுதியில் தனது மூக்கின் நுனியில் உள்ள குருத்தெலும்பில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். ஆனால், அந்த அறுவை சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக்கொள்ளாததால் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.

இதற்காக அவர் 61 நாட்கள் மருத்துவமனையில் தங்கி, மறு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால், சுமார் 45 லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. ஆனாலும், அவரது முகம் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. அறுவை சிகிச்சை செய்த இடம் கருப்பாக மாறிவிட்டது. இதனால், அவரது எதிர்காலமே இப்போது சூன்யமாக மாறிவிட்டது.

இதையடுத்து சீன சமூக வலைத்தளமான வெய்போவில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை  கோ லியூ, “நான்கு மணி நேர அறுவை சிகிச்சை என்னை மிகவும் அழகாக மாற்றும் என்று நம்பினேன். ஆனால், அது மோசமான கனவின் தொடக்கமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளவர் ”இது போன்று யாரும் முயற்சி செய்ய வேண்டாம்” என்று தனது ரசிகர்களையும் எச்சரித்துள்ளார். அவரது சமூக வலைத்தளப் பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரியளவுக்கு அனுதாபத்தைப் பெற்றுள்ளது.

முக அழகை மேம்படுத்தினால் பட வாய்ப்பு உயரும் என்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நடிகை கோ லியூ, தற்போது பட வாய்ப்பு எதுவும் இல்லாததால், என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கித் தவிக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments