கல்வி என்பது எட்டாக் கனியாக உள்ள தெருவோர குழந்தைகளுக்கு சாலையில் பாடம் நடத்தும் பெண் ஆசிரியை..!

கல்வி என்பது எட்டாக் கனியாக உள்ள தெருவோர குழந்தைகளுக்கு சாலையில் பாடம் நடத்தும் பெண் ஆசிரியை..!
திருப்பூரில் தெருவோர குழந்தைகளுக்கு பெண் ஆசிரியை ஒருவர் சாலையில் பாடம் கற்றுத் தருகிறார்.
நொய்யல் கரையோர பகுதியில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பினாயில் விற்றும் ஓலை கூடை பின்னியும் பிழைப்பை நடத்தி வருகின்றனர். அடுத்தவேளை உணவிற்கே திண்டாடும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி என்பது எட்டாக் கனியாகவே உள்ளது.
பெரியார் காலனியை சேர்ந்த அருணா மேரி என்ற ஆசிரியை அக்குழந்தைகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை வாங்கி கொடுத்து கல்வி பயிற்றுவித்து வருகிறார்.
Comments