இடி, மின்னல் குறித்து ஆய்வு நடத்த ஒடிசாவில் தனி ஆய்வு மையம்..!

இடி, மின்னல் குறித்து ஆய்வு நடத்த ஒடிசாவில் தனி ஆய்வு மையம்..!
இடி மின்னலுடன் கூடிய பெருமழை பற்றி ஆய்வு செய்வதற்காக ஒடிசாவில் தனி ஆய்வு மையம் அமைக்கப்படுகிறது.
புவனேஸ்வரில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஜெனரல் மிருதுயுஞ்சய், இதுபோன்ற ஆய்வு மையம் நாட்டிலேயே முதன்முறையாக ஒடிசாவில் அமைய உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இடி, மின்னலுடன் கூடிய பெரும் மழைதாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புக்கள், சேதங்களை தவிர்க்கும் நோக்கத்துடன் இந்த ஆய்வு மையம் அமைக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், போபால் அருகே பருவமழை சோதனைக் களம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய புவி அறிவியல் அமைச்சகம், இந்திய வானிலை ஆய்வு மையம், டிஆர்டிஓ, இஸ்ரோ ஆகியவை இணைந்து இந்த திட்டங்களை செயல்படுத்த உள்ளன என்றும் மிருதுயுஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.
Comments