உலகின் முதல் பறக்கும் மின்சார ரேஸ் காரை உருவாக்கியது ஆஸ்திரேலிய நிறுவனம்..!

உலகின் முதல் பறக்கும் மின்சார ரேஸ் காரை உருவாக்கியது ஆஸ்திரேலிய நிறுவனம்..!
உலகிலேயே முதன் முதலாக பறக்கும் மின்சார ரேஸ் காரை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கி உள்ளது.
ஏர் ஸ்பீடர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆக்டோகாப்டர் வகை வாகனம் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. ரிமோட் மூலம் இயக்கப்பட்டு செங்குத்தாக ஏறி இறங்கும் வசதி கொண்ட ஏர் ஸ்பீடர் உலகின் முதல் மின்சார ரேஸ் கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
முழுவதும் மின்சாரத்தில் இயங்குவதால் காற்று மாசு தவிர்க்கப்படும் என இதனைத் தயாரித்துள்ள அலாடா ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த வாகனம் அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments