பாகிஸ்தான் எல்லைக்குள் துல்லிய தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்த 2 ராணுவ வீரர்களை மீட்டது ஈரான்..!
பாகிஸ்தான் எல்லைக்குள் துல்லிய தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்த 2 ராணுவ வீரர்களை மீட்டது ஈரான்..!
பாகிஸ்தானில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை மீட்பதற்கு ஈரான் துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான், பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஜெய்ஷ் உல் அதுல் என்ற தீவிரவாத அமைப்பால் 12 ஈரானிய வீரர்கள் கடந்த 2018ம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டனர். இவர்கள் பலூசிஸ்தான் அருகே பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர்.
அவ்வப்போது சில வீரர்கள் விடுவிக்கப்பட்டு வந்த நிலையில் 2 பேர் மட்டும் தீவிரவாதிகளின் பிடியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகள் முகாம்கள் மீது ஈரான் ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தி 2 ஆண்டுகளாக பிணைக் கைதிகளாக இருந்த தங்கள் வீரர்களை மீட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
Comments