69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணை எப்போது?

69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு வரும் 8ம் தேதி விசாரணை
69 விழுக்காட்டுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் 8ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையில், மகாராஷ்ட்ரா இடஒதுக்கீடு வழக்கோடு இணைத்து 69 விழுக்காடு தமிழக வழக்கை விசாரிக்க கூடாது என தமிழக அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது பட்டியலிடப்பட்டு உள்ளது. இதையடுத்து வரும் 8ம் தேதி நடைபெற இருக்கும் விசாரணையை பொறுத்து நீதிபதி அசோக்பூஷன் அமர்வில் இருக்கும் வழக்கோடு இணைக்கப்படுமா அல்லது இதில் புதிய உத்தரவு ஏதேனும் பிறப்பிக்கப்படுமா என்பது தெரியவரும்.
Comments