இன்று விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம்

0 1050
இன்று விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம்

தேசிய நெடுஞ்சாலைகளை இன்று பிற்பகல் மூன்று மணி நேரம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

ஆனால் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக வெளியான வதந்திகளை விவசாய சங்கங்கள் மறுத்துள்ளனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லியை அடுத்த சிங்கூ எல்லையில் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குடியரசு தினத்தன்று நடத்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் பயங்கர வன்முறைக் காட்சிகள் அரங்கேறின. இந்தப் போராட்டத்திலும் அசம்பாவிதங்கள் நேரலாம் என்பதால் டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டத்தின் போது போக்குவரத்து முடங்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ள போதும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை தடுக்க மாட்டோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments