மிட்டாய் வாங்க ரூ.5 கேட்ட மனைவி: கோபத்தில் குழந்தையை கொன்ற கொடூர தந்தை கைது

0 4695

மகாராஷ்டிராவில் மிட்டாய் வாங்க மனைவி 5 ரூபாய் கேட்டதால், ஒன்றரை வயது மகளை, தந்தையே அடித்துக் கொன்றார்.

அந்த மாநிலத்தின் கொண்டியா மாவட்டத்தின் லொனாரா கிராமத்தைச் சேர்ந்த விவேக்கின், ஒன்றரை வயது மகள் வைஷ்ணவி, இரு தினங்களுக்கு முன்னர் மாலையில் ஓயாது அழுது கொண்டே இருந்தாள்.

அவளை ஆறுதல் படுத்த மிட்டாய் வாங்க நினைத்த தாய் வர்ஷா, அப்போது தான் வேலை முடிந்து வீடு திரும்பிய கணவனிடம் 5 ரூபாய் கேட்டார். சில்லறை இல்லை என்ற விவேக்கிடம் அவர் மீண்டும், மீண்டும் பணம் கேட்டார்.

இதனால் கோபமடைந்த விவேக்,குழந்தையை தூக்கி, சுவரிலும், மாடி படிக்கட்டிலும் அடித்தார். இதில் தலையில் காயம் பட்ட குழந்தை உயிரிழந்தது. வர்ஷா அளித்த புகாரின் பேரில் விவேக்கை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments