தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா: கள்ளக்குறிச்சி உள்பட 4 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு இல்லை

தமிழ்நாட்டில் புதிதாக, 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 506 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒரே நாளில் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
சென்னையில் 158 பேர், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவானது. கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
Comments