எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளி... மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

0 1088

எதிர்க்கட்சி எம்.பிக்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு அவை கூடிய உடனே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவசாயி சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஆதரித்தும் குரல் எழுப்பினர்.

இதனால் அமளி ஏற்பட்ட நிலையில் அவை 6 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. 6 மணிக்கு கூடிய போதும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார், அடுத்த இரு நாட்கள் விடுமுறை என்பதால் திங்கட்கிழமை அவை கூடும் என்றும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments