தமிழகத்தின் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல்

அரசியல் சாசனத்தின் அடிப்படையில் தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில்,
தமிழகத்தை பொறுத்த வரையில் சாதிவாரியான கணக்கெடுப்பு அடிப்படையில் 69 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றும், இதனால் மராத்தா இட ஒதுக்கீடு வழக்கோடு தமிழகத்தினுடைய 69 சதவிகித இட ஒதுக்கீடு வழக்கை இணைத்து விசாரிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments