கொரோனா பரவல் குறைந்து வருவதால் அலட்சியம் வேண்டாம் - சுகாதாரத்துறை செயலாளர்

0 1346

கொரோனா குறைந்து விட்டது என்பதற்காக மெத்தனமாக இருக்காமல் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் தஞ்சையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 30 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்ற அவர், கொரோனா குறைந்து விட்டது என்பதற்காக மெத்தனமாக இருக்க கூடாது என்றார்.

வருகிற 7-ந்தேதி முதல் அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற அவர்,செய்தியாளர்கள், ஆசிரியர்கள், நிதித்துறையினர், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments